புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் நவல்குந்து கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா வயது (40). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் கணவனை இழந்த இவருக்கும் ருத்ரகவுடா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நிர்மலாவின் மகன் ஆனந்த் வயது(22)க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ருத்ரகவுடாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளும்படி கூறினார்.
ஆனால் மகனின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.இந்நிலையில் நிர்மலாவும், ருத்ரகவுடாவும் உல்லாசமாக இருந்ததை ஆனந்த் பார்த்து விட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் கிடந்த கோடாரியை எடுத்து வந்தார். அதற்குள் ருத்ரகவுடா தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நிர்மலாவுக்கும், ஆனந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து கோடாரியால் நிர்மலாவின் தலையை வெட்டினார். இதில் நிர்மலாவின் தலை தனியாக துண்டித்து உடல் வேறு, தலை வேறானது. பின்னர் நிர்மலாவின் தலையை வீட்டில் இருந்த பொலித்தீன் பையில் வைத்து எடுத்து கொண்டு வீட்டில் இருந்து ஆனந்த் வெளியேறினார். தாயின் தலையுடன் வெறி பிடித்தவர் போல நடந்து சென்ற ஆனந்த், அங்குள்ள ஒரு இடத்தில் தலை இருந்த பையை வைத்தார்.
இதற்கிடையே இந்த சம்பவம் ஊருக்குள் காட்டுத்தீபோல பரவத் தொடங்கியது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் விரைந்து சென்று ஆனந்தை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நிர்மலாவின் தலை வைக்கப்பட்ட பாலித்தீன் பையை காவல்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஆனந்த் மீது அண்ணிகேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தன் தாயின் கள்ளக்காதலை காண சகிக்காத மகன் கோடரியால் பெற்ற தாயின் கழுத்தை துண்டாடிய கொடுமை நிகழ்ந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top