புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஏழுமலை, மருதமலை போன்ற படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்ததால், தான் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பில் மலை இருக்க வேண்டும் என நினைத்து மலையை தேடிக் கொண்டிருக்கிறாராம் ஆக்ஷன் கிங் அர்ஜூன். அப்பா கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு வயது ஏறினாலும், டூயட் பாடும் மூடில் கோடம்பாக்கத்தை வலம் வந்து கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜூன்.
சமீபத்தில் வெளியான படத்தில் அஜித்துக்கு சரிசமமான ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் நற்பெயர் எடுத்திருக்கும் அர்ஜூன், அடுத்த பட வேட்டையில் இறங்கியிருக்கிறார்.

தன்னைத் தேடி வாய்ப்புகள் வந்த நிலை மாறி, தானே தேடிப்போய் வாய்ப்பு கேட்கும் நிலைமைக்க தள்ளப்பட்டிருக்கும் அர்ஜூன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இவரது நடிப்பில் ஏழுமலை, மருதமலை என்ற இரண்டு படங்களை தயாரித்திருக்கிறது அந்த நிறுவனம். அர்ஜுனே தேடி வந்து வாய்ப்பு கேட்டதால் சரி என்று சம்மதித்தாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த படத்தை அர்ஜுனே இயக்கப் போகிறார். சென்ட்டிமென்ட் படி ஏதாவது ஒரு மலை தலைப்பில் இருக்கட்டும் என்று கூறப்பட்டிருக்கிறதாம். அதனால் புதிய மலையைத் தேட ஆரம்பித்திருக்கிறாராம் ஆக்ஷன் கிங்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top