புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருமணமாகி சட்டபூர்வமாக பதிவு செய்து கொள்ளாதவர்கள் திருமணப்பதிவை மேற்கொள்ள பதிவாளர் நாயக திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிறப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றை இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கான திருமண சான்றிதல் மற்றும் பிறப்பு அத்தாட்சி சான்றிதல்
ஆகியவற்றை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவஐயர் நியூஸ்பெஸ்டுக்கு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மவாட்டங்களில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பதிவு அலுவலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 200 சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மேலதிக பதிவாளர் நாயகம் குறிப்பிட்டார்.

சான்றிதழ்கள் கணனி மயப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள பதிவாளர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் திருமணப் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் தமது பதிவுகளை தற்போது மேற்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மாவட்ட செயலகங்கள், பிரதேசசபைகள் ஊடாக இதற்கான ஒத்துழைப்பு பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வித தாமதங்களும் இன்றி மிகவும் குறுகிய காலத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர் மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top