பழம்பெரும் நடிகர் எஸ்.ஏ. கண்ணன் காலமானார். அவருக்கு வயது 82. சென் னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் வசித்து வந்த அவருக்கு பாலமுருகன், கோதண்டராமன், கிருஷ்ணா ஆகிய மகன்களும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். ‘சக்தி’ நாடக சபாவில் நடிகராக இருந்த அவர்,
எம்.ஜி.ஆர்., சிவாஜியோடு பல நாடகங்களில் நடித்தார்.
‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘தங்கப்பதக்கம்’, ‘வியட்நாம் வீடு’ ஆகிய நாடகங்களை உருவாக்கியவர்களில் ஒருவர். ‘பராசக்தி’ படத்தில் சிவாஜியை கிளைமாக் சில் விசாரணை செய்யும் வழக்கறிஞராக அறிமுகமானார். ‘பாசமலர்’ படத்தில் சிவாஜியுடன் வேலைக்காரனாக நடித்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஆங்கிலேயே அதிகாரியாக நடித்தார். சிறு சிறு வேடங்களில் நடித்தவர், ‘தனிகுடித்தனம்’, ‘சத்தியம்’, ‘கீதா ஒரு செண்பகப்பூ’, ‘அது மட்டுமா?’ ஆகிய படங்களையும் இயக்கினார். மறைந்த கண்ணனின் உடல், சென்னை ஜாபர் கான் பேட்டை சுடுகாட்டில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக