புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகம் தோன்றிய காலம் முதல் பலவகையான நோய்களுக்கு மனிதன் பலியாகிக் கொண்டிருக்கிறான்.அத்தகைய நோய்களில் இதுவும் ஒன்று.மூளையின் இயக்கத்தை பல வகையில் பாதிக்கும் இந் நோயை மூளை மழுங்கு நோய் என்றும் கொள்ளலாம்.

ஞாபக மறதி நோய் அல்லது நினைவு திறன் இழப்பு நோய் என்றும் சொல்லலாம்.மூளையின் செயல்பாட்டை படிப்படியாக மழுங்கடிக்கும்.அல்ஸிமர் நோய் படிப்படியாக அதிகரிக்க கூடிய,அதே சமயத்தில் பழைய நிலைக்கு மீள முடியாததுமான குணத்தை உடையது.[It is a degenerative disorder].நோயின் பாதிப்பு அதிகரிக்கும் பொழுதுமூளையில் பல இடத்தில் உள்ள செல் சுருங்கி அழிந்துவிடும்.[destroys the brain cell].இதனால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது.

இந்நோய் வயோதிபத்தின் காரணமாகவும் ,மரபுரீதியாகவும்,தலையில் அடிபடுதல் போன்றவை காரணமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆண்களைவிட பெண்களை அதிகமாக பாதிக்கிறது.வாழ்க்கை முறையிலுள்ள மாற்றம் காரணமாகவும் இந் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம்,அதிகப்படியான கொழுப்பு சத்து,உணவு முறை உட்பட பல விஷயங்கள் இந் நோய்க்கு காரணிகளாக உள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.இந்நோயை மருந்துகளின் மூலம் ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தலாம்.ஆனால் நிரந்திர தீர்வு கிடையாது.

ஆரோக்கியமான உணவுடன்,தொடர்ந்த உடற்பயிற்சி,யோகா,தியானம் ,புத்தகம் படித்தல்,சுடோகுபயிற்சி,வலதுகை பழக்கம் உள்ளவர்கள் இடதுகையிலும்,இடக்கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையிலும் செயல்களை செய்தால் மூளைக்கு பலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top