புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அணு ஆயுதங்களைத் தாங்கி, 8,000 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணையை, ரஷ்யா நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது.ரஷ்யாவின் "புலாவா' ஏவுகணை, 37 டன் எடை கொண்டது. கண்டத்துக்குள் 8,000 கி.மீ., தொலைவில் இருக்கும் இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்
கூடியது.

ரஷ்யாவின் வடதுருவத்தில் உள்ள வெள்ளைக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, "யூரி டோல்கோருக்கி' என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 6,000 கி.மீ., தூரம் உள்ள ரஷ்யாவின் கிழக்கு ஓரத்தின் கமசட்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை, இந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கியது.

"புலாவா' ஏவுகணை, ஏற்கனவே நடந்த 17 பரிசோதனைகளில், ஏழு முறை தோல்வி அடைந்ததால், அதை உபயோகிக்க முடியவில்லை.

தற்போது குறைகளை நீக்கி நடந்த இந்த பரிசோதனை வெற்றியடைந்துள்ளதால், ரஷ்ய ராணுவத்தில் விரைவில் சேர்க்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top