புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெரிதாக பார்க்க படத்தின் மேல்
அழுத்தவும் 

"நண்பர்கள் குழாம் சத்துணவுத்திட்டம்" பணிப்புலத்தில் இருக்கும் அனைத்து பாலர்பாடசாலைகளுக்கும் சத்துணவு, ஒவ்வொரு மாணவரது பிறந்தநாளை பாடசாலையில் கொண்டாடுவது, தீபாவளி, சித்திரை வருடம் இரண்டுக்கும் புத்தாடை, சிறுவர்தினத்தில் 

மாணவர்களை கௌரவித்து கேக்வெட்டி ஒரு 
சுற்றுலா, ஆதரவுகள் பெருகும் பட்சத்தில் வேறு சில நல்லவிடயங்களை கவனத்தில் எடுக்கப்படும். இது நண்பர்கள் குழாம் சத்துணவுத்திட்டத்தின் விளக்கம்.


இந்த திட்டத்தை உருவாக்க எமக்கு பெரிதும் உதவியது நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தினரால் ஊரில் இருந்து எடுத்துவரப்பட்ட காணொளியும், நிழற்படங்களுமாகும். இவர்களது நாட்டில் வாழும் எம்மூரவரின் எண்ணிக்கையின் அடிப்படையில் இவர்கள் தங்களால் முடிந்தவரை உதவுகின்றார்கள் என்பதால் அவர்களிடம் எல்லாச்சுமையும் சுமக்கமுடியாது. இந்த பெயர் இடக்காரணம் நண்பனுக்கு நண்பர்கள் மூலம் ஒரு தொடர் என்பதாலே " நண்பர்கள் குழாம் சத்துணவுத்திட்டம்" என பெயரிடப்பட்டுள்ளது.


இதனுள் தாராள மனமுடைய அனைத்து நண்பர்களையும் உள்வாங்கப்படுவர். தற்போது ஆதரவு வளங்குபவர்களின் பெயர்களும் இந்த சத்துணவுத்திட்டத்தின் ஒரு திட்டமிடல் கணக்கும், இதுவரை உள்ள செலவுகளின் தகவல்களும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தை ஊரில் திரு ஜெ.பவா அவர்கள் மேற்பார்வையுடன் நடைபெறுகின்றது. ஆசிரியை சுதா அவர்கள் தன்னால் இயன்ற உதவிகள் செய்கின்றார்.
இதன் ஆரம்பம் அடிப்படைக்கல்வியில் ஆரம்பித்துள்ளோம். போசாக்கான உணவும், உடையும், கிடைத்தால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் படிக்க அனுப்பிவைப்பார்கள். எமது இந்த சிறிய திட்டம் தொடங்கி ஒரு மாதமாகும் சிறப்பாக நடாத்தப்படுகின்றன.


காலையடி ஸ்ரீமுருகன் பாலர் பாடசாலைக்கு சத்துணவு வழங்குவதற்கு எமக்கு மறுமலர்ச்சி மன்றத்தின் நிர்வாகத்திடமிருந்து அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தினால் இறுதியில் அப்பாடசாலைப்பிள்ளைகளுக்கு எம்மால் உதவி புரியமுடியாமைக்கு மனம்வருந்துகிறோம்.


இந்த திட்டம் எங்களது குறுகியமூளைக்குள் தோன்றியதை செய்துகொண்டு இருக்கின்றோம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் ஆதரவுகளும் வரவேற்க்கப்படுகின்றது.


´நண்பர்கள் குழாம்´ புலம்பெயர் நண்பர்கள். 








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top