புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.பாக்தாத் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷித்தே மாகாணத்தில் உள்ள சத்தார் நகரில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.


தலைநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க படைகள் வெளியேறி வருவதைத் தொடர்ந்து பிரிவினையைத் தூண்டும் விதமாக சன்னி முஸ்லிம் பிரிவினர் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தார் நகரில் ஒரு வீட்டின் அருகே முதலாவது குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியைச் சுற்றி மக்கள் திரண்டபோது ஒரு நிமிஷ இடைவெளியில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் 17 பேர் இறந்தனர்.

இரண்டாவதாக வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் பொலிஸ் அதிகாரிகள்.

அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறும் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் தினசரி இதுபோன்ற குண்டுவெடிப்பு, தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top