உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் தற்போது இடிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப் பெருஞ்சுவர் இடிவதற்கு பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும்.
மேலும் சீனா – ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின் போது இது பலகட்ட தாக்குதலுக்கு உள்ளானது.
அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்து அதிக விலைக்கு விற்றனர்.
இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.
சீனப் பெருஞ்சுவர் சீனாவில் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது. 5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக