புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில், சீனாவில் முதன்முறையாக தாவர எண்ணெய்யில் இயங்கும் விமான சேவை நேற்று பரிசோதிக்கப்பட்டது. பூமி வெப்பமாவதைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உலகின்
மிகப்பெரிய நாடான சீனாவும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக விமானங்களுக்கு தாவர எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவும் இணைந்து, ஆல்கா அல்லது ஜட்ரோபா கொட்டையிலிருந்து தாவர எரிபொருள் கண்டுபிடிப்ப தற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக தாவர எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டு, அதை போயிங் 747 விமானத்தில் பயன்படுத்தி நேற்று இயக்கப்பட்டது.

பெய்ஜிங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் இரண்டு மணி நேரம் வெற்றிகரமாக இயங்கியது. தாவர எரிபொருளில் விமானம் இயங்கியது சீன விமானத் துறையில் ஒரு மைல் கல் ஆகும். அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் வர்த்தக ரீதியில் விமானங்களில் தாவர எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியும் என ஏர் சீனா துணைத் தலைவர் ஹி லி தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top