புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailசவுதி அரேபியாவில், ஒரு தம்பதியை, வாகனத்தை ஏற்றி கொன்ற நபருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கற்பழிப்பு, கொலை, ஆயுதத்தை காட்டி கொள்ளையடித்தல், போதை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.


மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை ரத்து செய்யும்படி, ஐ.நா., மனித உரிமை கமிஷன், பல ஆண்டுகளாக, சவுதி அரேபியாவை வற்புறுத்தி வருகிறது. இருப்பினும், இதை ஏற்க மறுத்து, இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையை நிறைவேற்றி வருகிறது. முகமது அல் ஹார்பி என்ற நபர், சவுதியைச் சேர்ந்த தம்பதியை உள்நோக்கத்துடன் வாகனத்தை ஏற்றி கொலை செய்துள்ளார். இதற்காக, அல் ஹார்பிக்கு, சவுதி உள்துறை அமைச்சகம், நேற்று தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top