புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருகோணமலை மொறவவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிகுளம் பிரதேசத்திலுள்ள அரச காணி ஒன்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. பொன்னம்பலம் தங்கம்மா என்ற 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 9ஆம்
திகதி மாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே
சென்றிருந்த குறித்த பெண், கடந்த இரண்டு தினங்களாக வீடு திரும்பாத நிலையில், பிரதேசவாசிகள் குறித்த பகுதியில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்போது, நொச்சிகுளம் பிரதேசத்திலுள்ள அரச காணி ஒன்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top