புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திரிஷா காட்டாமீட்டா என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அசின் இந்தியில் கலக்குவது போல் இப்படத்துக்கு பின் தனக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் படம் தோல்வி
அடைந்ததால் படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் மீண்டும், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி திரிஷா ஆவேசமாக கூறியதாவது:- படம் தோற்றால் மனம் கஷ்டப்படுகிறது. வேலை எதுவும் ஓடவில்லை. காட்டாமீட்டா இந்திப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வந்தன. அட்வான்ஸ் தர தயாராக இருந்தார்கள். ஆனால் நான் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. காட்டாமீட்டர் ரிலீஸ் ஆனபிறகு தான் புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாவேன் என்று கூறிவிட்டேன். படம் நன்றாக போகாததால் என்னை தேடிவந்தவர்கள் காணாமல் போனார்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை. மீண்டும் இந்திப்பட வாய்ப்பை பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top