புகையிலையால் செய்யப்பட்ட சிகெரெட்டை விற்பனை செய்த 13 வர்த்தக உரிமையாளர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மதுவரி திணைக்கள பரிசோதகர்களால் நகரக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் மூலம்,
இந்த சிகரெட்டுக்களை 21 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று மாலை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மா.கணேசராசா குறித்த வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஒவ்வொருவரையும் தலா 4000 ரூபா அபராதம் செலுத்துமாறும் தவறின் 2 மாதம் சிறைத் தண்டணை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக