புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை சேர்ந்தவர் மரியஸ் எல்ஸ் (41). விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஜோகன்னஸ்பர்க் அருகே 400 ஏக்கர் பரப்பில் பண்ணை வைத்திருந்தார். அதில் ஒட்டகசிவிங்கி, காண்டாமிருகம் உள்பட பல காட்டு விலங்குகளை வளர்த்து வந்தார்.
அவரது பண்ணையில் ‘ஹம்ப்ரி’ என்ற நீர்யானை ஒன்றும் வளர்ந்து வந்தது. 5 வயது குட்டியாக
இருக்கும்போதே அதை வளர்க்க ஆரம்பித்தார் மரியஸ். ‘‘பொதுவாக எல்லாரும் நாய், பூனை, மாடு, ஆடு ஆகியவற்றைதான் செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள்.

எனக்கு ஹம்ப்ரிதான் செல்லப்பிள்ளை’’ என்று மரியஸ் அடிக்கடி சொல்வார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பண்ணையை ஒட்டியுள்ள ஆற்றில் ஹம்ப்ரி நீர்யானையுடன் மரியஸ் குளித்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதையடுத்து, பண்ணை முழுவதும் ஊழியர்கள் தேடினர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது தெரியவந்தது. கடந்த மார்ச்சில் பண்ணைக்கு சென்ற 52 வயது நபர் மற்றும் அவரது 7 வயது பேரனை ஹம்ப்ரி நீர்யானை தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர்கள் ஒரு மரத்தில் ஏறியதால் தப்பினர். மரியஸ் சென்று, நீர்யானையை அடக்கி அவர்களை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top