புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மலைத்தொடர் என்பது பூமியின் தென் துருவ வலயமான அண்டாட்டிக் கண்டத்தில், 1958 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைத்தொடர் ஆகும். இந்த மலைத்தொடரின் மேல், இப்போது 2 மைல் உயரத்திற்கு பனி கொட்டியுள்ளதால், கிட்டத்தட்ட முற்றாக மூடப்பட்டு சம தரை போன்று
காட்சிஅளிக்கிறது.

எனினும் உண்மையில் இது ஐரோப்பாவின் ஆல்ஸ்ப் மலைத்தொடருக்கு இணையான இராட்சத வடிவம் உடையது. சுமார், 2700 மீற்றர் (கிட்டத்தட்ட 2.7Km) உயரமுடையதும், 1200 கி.மீ நீளத்திற்கு பரந்துள்ளதாகவும் இருக்கிறது.
இம் மலைத்தொடர் சுமார் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என மதிப்ப்டப்பட்டாலும், இவை எப்படி உருவாகின என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனாலும், இம் மலைத்தொடரை முற்றாக பனி மூடியுள்ளதாலும் இவற்றை பேய் மலைத்தொடர் என்ற அடைமொழியுடன் கூறிவந்தார்கள்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மற்றும் செய்மதியின் உதவியுடன் இம்மலை உருவாக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்த AGAP குழுவினர் இறுதியில் இந்த மர்மத்தை கட்டவிழுத்துள்ளனர். பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு கண்டமும், ஒன்றுடன் ஒன்று பிணையப்பட்டு, Rodhinia என்னும் இராட்சத நிலப்பிரதேசமாக இருந்துள்ளது.

என்னும் வருடங்கள் செல்ல செல்ல, அவை அரிக்கப்பட்டுள்ளன. குளிர் பிரதேச நிலப்பரப்புக்கள் மட்டும் அப்படியே இருந்துள்ளன. டைனோசர்கள் வாழ்ந்த 250-100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், இக்குளிர் நில பரப்புக்களில் உருவான பாரிய மேடு பள்ளங்கள் அண்டாட்டிக் பகுதியின் தரைப்பகுதியின் கீழ் அப்படியே மையம் கொண்டிருந்ததாகவும், இப்பனிப்பள்ளத்தாக்குகளும், ஆறுகளுமே, மற்றைய பகுதிகளை சிகரங்களாக உருவாக்கிவிட்டன எனவும் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் பனித்தகடுகளின் யதார்த்தமான மாதிரி வடிவங்களை உருவாக்குவதும், பனித்தகடுகளின் பரிணாம வளர்ச்சி எப்படி வித்தியாசப்படுகிறது என்பதனை கண்டுபிடிப்பதும் சவாலான விடயமாக இருப்பதாகவும் அக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது தென் துருவத்தின் பனி நிலத்தை துளைத்து, Gamburtsevs மலைத்தொடரின் வடிவம் எப்படிப்பட்டது என கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ள போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top