புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் தொழிலாளியின் துண்டான விரலை அவரது வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்துள்ளனர். சீனாவை சேர்ந்த 20 வயது வாலிபர் வாங் யான்ஜுன். தச்சு வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது நடுவிரல் நுனி துண்டானது. துண்டான விரல்
பாகத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் வாங்.
அதற்குள் ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் துண்டான பாகத்தை விரல் நுனியுடன் சேர்க்க முடியாமல் நசுங்கி இருப்பதை பார்த்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நடுவிரலை இழக்கும் அபாயம் இருந்ததை அறிந்தனர்.

டாக்டர்கள் அவசர அவசரமாக ஆலோசித்து வாங்கின் துண்டான விரலை வயிற்றுடன் இணைத்து ஆபரேஷன் செய்தனர். இதுகுறித்து டாக்டர் ஹூவாங் சூசாங் கூறுகையில்.

 வாங்கின் விரல் நுனி நசுங்கி இருந்தது. துண்டான பாகத்தை ஒட்ட வைக்க முடியவில்லை. துண்டான விரலில் வெறும் எலும்பு மட்டுமே வெளியில் தெரிந்தது. வேறு வழியில்லாமல் அவரது விரலை வயிற்றுடன் இணைத்து தைத்து விட்டோம். முதலில் விரலுக்கு ரத்த ஓட்டம் சீராக வேண்டும். அதன்மூலம் விரல் நுனி தானாகவே வளர வாய்ப்புள்ளது. ஒரு மாதத்துக்கு பின் வயிற்றில் இருந்து விரலை பிரித்து விடுவோம். ஆபரேஷன் முழு வெற்றி அடைந்துள்ளது. சதை வளர தொடங்கி உள்ளது என்றார். அதுவரை கை விரலும் வயிறும் இணைந்தே இருக்கும் என்பதுதான் கொடுமை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top