யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் முருகண்டிக்கு அருகாமையில் மோதிக் கொண்டதனையடுத்து ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று
காலையில் இடம்பெற்றுள்ளது டிப்பர் வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ், டிப்பர் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதனையடுத்து அதனுடன் மோதிக் கொண்டதையடுத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவரே உயிரிழந்தவராவார். மேலும் ஐவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக