புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமரர்
இராசையா கோகிலராஜா
                               தோற்றம் ௦1 .03 .1953                     மறைவு .27 .10 .2010 

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,சாந்தை ,பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசையா கோகிலராஜா அவர்களின் 
முதலாம் ஆண்டு நினைவுகளை சமர்ப்பிக்கிறோம் .
                   
                    வித்தகராய் நாம் பாரினிலே வாழ்ந்திட 
                            உத்தமனாய் வாழ்ந்து காட்டினாயே 
                     உற்றார் மாய்ந்திட சாந்தையூர் தாசனாய்
                           உருவெடுத்து கவிபுனைந்தாயே 
                    உன் பிரிவை கவி புனைய -இன்று 
                           உன் முத்துக்களான நாம் 
                    நீ விதைத்த வித்துக்கள் கனிதரும் முன்னே 
                          நீ மண்ணில் மாய்ந்ததென்ன 
                   அஞ்சுதே எம் விழிகள் உனைகாண
                        நெஞ்சமே கருகி நிற்கின்றோம் 
                   வஞ்சகன் உன்னை கவர -இவ்வுலகிற்கு 
                        வஞ்சகம் தீர்த்திட வந்தானோ 
                   ஆண்டொன்று சென்றாலும் 
                        ஆறாது எம்துயரம் 
               
                 ஓம் சாந்தி...! ஓம் சாந்தி ...! ஓம் சாந்தி 

 எமது தந்தையின் பிரிவு செய்தி கேட்டு தொலைபேசி மூலமும் ,நேரடியாகவும் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு ,அவரின் இல்லத்திலும் ,பிள்ளைகளின் இல்லத்திலும் (ஜெர்மனி ) ,15 .11 .2011  திதி-திருவாதிரை சதுர்த்தி தினத்தில் நடைபெறும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம் .

நன்றியுடன் 
குடும்பத்தினர் 
சாந்தை ,பண்டத்தரிப்பு 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top