இந்தோனேஷியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.42 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 என பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஆனால் தங்கள் நாட்டு மதிப்பீட்டின்படி 6.2 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக
இந்தோனேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்மடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதுமில்லை. நாட்டின் மலைப்பிரதேச நகரான ஓக்சிபிலில் இருந்து 34 கி.மீ தென்மேற்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக இந்தோனேஷிய புவியியல் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அருகில் இருக்கும் தனாமெரா, மெராக் மற்றும் வாமனா மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக