புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு





பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் திருகோணாமலையை வதிவிடமாகவும் கொண்ட திரு கனகசபை தேவபூலோகராசா இன்று (24-11-11) காலை

இறைபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்; அமரர்களான சின்னத்தம்பி - சின்னம்மா
தம்பதியினரின் அன்பு மருமகனும்;லீலாவதியின் அன்புக் கணவரும்; ஜெயராணி,றூபனின் அன்புத் தந்தையும், பாலகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்; இலங்கேஸ்வரி, லிங்கநாதன், சுப்பிரமணியம், சிவநேசன், தில்லைநாதன், வேல்முருகன், தவராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்; தங்கராசா, லிங்கலிங்கம் (இறைபதம்), ஜெயராசா, செல்வராசா, ரஞ்சிதம், பராசம்(இறைபதம்) ஆகியோரின் மைத்துணருமாவார்.




அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 27.11.11 அன்று காலை 10 மணியளவில் ஓஸ் கில் திருகோணாமலை இல்லத்தில் இடம்பெற்று.கிரிகைகளின் பின் இவரது பூதவுடல் ஊர்வலமாக திருகோணாமலை இந்து மயானத்துக்கு எடுத்துச்சென்று தகனம் செய்யப்படும் என உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கு அறிவிக்கின்றோம்.:

தகவல்: ஜெகதீஸ்வரன் தங்கராஜா நோர்வே.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top