புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனிய நகரான கோப்லென்ஸில், இரண்டாம் உலக யுத்தகால குண்டொன்று அந்நகரைச் சேர்ந்த 45000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப் படுகின்றனர். 1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும்.ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த
குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  மழை வீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை )காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிராங்பர்ட் நகரிலிருந்து வடமேற்கே 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்நகரில் ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்துகளும் நிறுத்தப்படவுள்ளன.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top