புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடலூர், பெண்ணையாற்றின் குறுக்கே, புதுச்சேரி மாநில சாராய வியாபாரியால் கட்டப்பட்ட மரப்பாலத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அகற்றினர். கடலூர் பெண்ணையாற்றையொட்டி, புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சிக்குப் பக்கத்தில் உள்ள சாராயக் கடையில், கடலூர் மற்றும் அதைச்
சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான "குடிமகன்கள்' தினமும் வெளிச்செம்மண்டலம் வழியாக பெண்ணையாற்றைக் கடந்து சென்று "தாகசாந்தி' செய்து வந்தனர்.

ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடியதால், ஆற்றைக் கடந்து செல்ல சிரமமடைந்த குடிமகன்கள் வசதிக்காக, ஆராய்ச்சிக்குப்பம் சாராய வியாபாரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் அனுமதியின்றி சொந்த செலவில் பெண்ணையாற்றின் குறுக்கே 1 கி.மீ., தூரத்திற்கு மரப்பாலம் அமைத்து கொடுத்தார்.

இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மரப்பாலம் கட்டிய ஆராய்ச்சிக்குப்பம், சாராய வியாபாரி சேதுராமனுக்கு பாலத்தை அகற்ற வேண்டுமென நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், பொதுப்பணித் துறை ஊழியர்கள் பொக்லைன் மூலம் அருகில் இருந்த கருவச் செடிகளை அப்புறப்படுத்தி பாலத்தின் முகப்புப் பகுதியில் முள் வேலி அமைத்தனர்.
இருப்பினும், பாலத்தை சாராய வியாபாரி அகற்றவில்லை. இந்நிலையில், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் கலியமூர்த்தி, உதவிப் பொறியாளர் ராஜன், தாசில்தார் எழிலன் ஆகியோர் முன்னிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கரையிலிருந்து, தமிழக எல்லை வரை, 100 மீ., தூரத்திற்கு மரப்பாலத்தை அகற்றினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top