பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளி காற்று, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாஷி என்ற சூறாவளி காற்று வீசியதில், தென் பகுதியில் உள்ள மணிலா
உள்பட 2 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நகரங்களில் புகுந்தது. இதனால் நகரில் மின்சார ஒயர்கள், மரங்கள் அறுந்து விழுந்தன. நகரங்கள் இருளில் மூழ்கின. வீடுகள் தரைமட்டமாகி உள்ளன.
இதில் ஏராளமானோர் பலியானார்கள்.
இதுகுறித்து செஞ்சிலுவை சங்க செயலாளர் குவென் பாங் நிருபர்களிடம் கூறுகையில், காகாயான் டி ஓரோ பகுதியில் 215 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இலிகன் நகரில் 144 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 436 பேர் இறந்துள்ளது உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது என்றார்.
பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பலர் உறக்கத்தில் இருந்துள்ளனர். வீடுகளில் திடீரென வெள்ளம் புகுந்ததில் தப்பிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணியில் போலீசார், பொதுமக்கள், கடலோர காவல் படையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக