சொத்துக்களை,பறிப்பதற்காக,நான்கு ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய,பெண் மீது வழக்குப்,பதிவு,செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினக்குமார் (வயது 34).குள்ளமான உருவம்கொண்ட மாற்றுத்திறனாளியான இவர் பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் டேட்டா என்டரி
சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சென்டரில் பொள்ளாச்சி லட்சுமி நகரை சேர்ந்த மணிமேகலை (30) என்ற பெண் வேலைக்கு,சேர்ந்தார். அவருக்கு மாத சம்பளமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இதைத்,தொடர்ந்து,ரத்தினக்குமாருடன்,மணிமேகலை,நட்பாக,பழகி,வந்தார்.,அன்பாக,பேசி,வந்த,மணிமேகலை,,மாற்றுத்திறனாளியான,உங்களை,நான்,திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரத்தினக்குமாரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டு,உள்ளது.
திருமணத்தின் போது மணிமேகலையின் தாயார் வீரம்மாள் அக்காள் சித்ரா தம்பிகள் ராமன் லட்சுமணன் அவரது நண்பர் குணசேகரன் ஆகியோர் சாட்சி கையெழுத்துப் போட்டு உள்ளனர்.திருமணத்திற்கு பின்னர் மணிமேகலையும் ரத்தினக்குமாரும் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு,சென்று,வந்தனர். திருமணம் முடிவடைந்து 6 மாதம் ஆன பின்னர் மணிமேகலை கணவர் பெயரில் பொன்னாயூரில் உள்ள 10 சென்ட் நிலத்தை தனது தம்பிகள் பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி ரத்தினக்குமாரிடம் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து மணிமேகலை,மீது இருந்த பாசத்தில் அந்த நிலத்தை ரத்தினக்குமாரும் எழுதிக்கொடுத்தார். மேலும்,அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தையும் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால்,நீண்ட,நாட்கள்,ஆகியும்,திரும்பி,வராததால்,ரத்தினக்குமார்,மணிமேகலையை,பார்க்க,அவரது,வீட்டிற்கு,சென்றார்.
அப்போது மணிமேகலை `எனக்கும் உனக்கும் ஒத்து வராது. ஏற்கனவே கடத்தூரை சேர்ந்த சதீஷ் மானூரை சேர்ந்த சசி ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டேன்’ என்று கூறி முதல் கணவருடன் இருந்த போட்டோவை காட்டினார். மேலும் தற்போது 4-வதாக குள்ளக்காபாளையத்தை சேர்ந்த குணசேகரனை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருவதாக மணிமேகலை தெரிவித்து,உள்ளார்.
இதனால்,,ஆசைவார்த்தை,கூறி,திருமணம்,செய்து,தன்னிடம்,இருந்து,நிலம்,,பணம்,,நகையை,பறித்ததை,அறிந்து,ரத்தினக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.இந்த,சம்பவம்,குறித்து,மணிமேகலை,மீது,பொள்ளாச்சி,மகாலிங்கபுரம் போலீசில்,ரத்தினக்குமார்,புகார்,கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் மணிமேகலை அவரது தாயார் தம்பிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின்,முதற்கட்ட விசாரணையில் ரத்தினக்குமார்- மணிமேகலை திருமணத்தின்போது சாட்சி கையெழுத்து போட்ட குணசேகரனைதான் தற்போது மணிமேகலை திருமணம் செய்து உள்ளதும் தெரியவந்தது.
ஒரே,பெண்,பணம்-சொத்துக்காக,4,ஆண்களை,ஏமாற்றி,திருமணம்,செய்துள்ள,சம்பவம்,பொள்ளாச்சியில்,பரபரப்பை,ஏற்படுத்தி,உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக