இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா (94). இவர் ஒரு கோடீசுவரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டில் சுற்றித்திரிந்த ஒரு கறுப்பு பூனையை அவர் பார்த்தார். அதன் மீது அவருக்கு அளவற்ற அன்பும் பாசமும் ஏற்பட்டது.
அந்த பூனையை தனது வீட்டிற்கு கொண்டு வந்து
குழந்தை போன்று வளர்த்தார். அந்த பூனையும் அவர் மீது பாசமழை பொழிந்தது.
அந்த பூனைக்கு “டொம்மாசோ” என செல்லமாக பெயர் வைத்தார். இந்த நிலையில் மரியாவுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் பயந்து போன அவர் ரோம், மிலன் ஆகிய நகரங்களில் உள்ள தனது வீடுகள் மற்றும் கலாப்ரியா என்ற இடத்தில் உள்ள நிலங்களை பூனை டொம்மா சோவின் பெயரில் எழுதி வைத்தார். மேலும் ரொக்கப்பணம், பங்கு பத்திரங்கள் போன்ற வற்றையும் பூனையின் பெயருக்கு வழங்கினார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 கோடி. இந்த சொத்துக்களை வைத்துக்கொண்டு பூனையை சிறந்த முறையில் பராமரிக்கும்படி பல மிருக நல அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அவர் விதித்த நிபந்தனைகளை ஏற்க எந்த அமைப்பும் முன் வரவில்லை. எனவே, அவர் ஸ்டெபானியா என்ற நர்சை பணிக்கு அமர்த்தி கவனித்து வந்தார். மேலும் பூனையை பராமரிக்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கினார். இதற்கிடையே, கடந்த 2 வாரத்துக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார்.

0 கருத்து:
கருத்துரையிடுக