புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


Image Detailசெல்போனில் தொடர்ந்து பேசி வந்ததை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவி உடன் செல்போனில் பேசி வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஜான்சன்பேட்டை அடுத்த நல்லாங்காட்டை சேர்ந்த தமிழ்வாணனின்
இளைய மகள் பிரியங்கா(21). இவர் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலையில் பிரியங்காவுக்கு கல்லூரி செமஸ்டர் தேர்வு நடந்தது. அந்த தேர்வில் கலந்து கொள்ள காலை 8.45 மணிக்கு பிரியாங்காவின் அண்ணன் பாலாஜி, அவரை பைக் மூலம் கல்லூரிக்கு கொண்டு வந்துவிட்டார். கல்லூரிக்குள் சென்ற பிரியங்கா, தேர்வுக்கு செல்லாமல் கல்லூரியில் இருந்த பழைய வகுப்பறை கட்டிடத்தின் 2வது கட்டிடத்துக்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்து கொண்டு வந்த பச்சை நிற சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரியின் பழைய கட்டிடத்துக்கு சென்ற கல்லூரி மாணவி ஒருவர், பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறினார். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், எஸ்.ஐ. ஜெகநாதன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரியங்காவின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரியங்கா தனது அண்ணன், தாய் செல்போன் மூலம் அடிக்கடி யாரிடமோ நீண்டநேரம் பேசி வந்தது தெரிய வந்தது. இதனை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறி்த்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் மாணவி பிரியங்காவுடன் நீண்டநேரம் செல்போனில் பேசிய நபர் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதால் இன்று அரசு மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top