வெளியிடப்பட்டிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிராண்குளம் பகுதிகளை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த மாணவி பாடசாலையில் திறமையான மாணவியெனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த மாணவியின் பரீட்சை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக மோசமான நிலையில் வெளிவந்ததன் காரணமாக இந்நிலையேற்பட்டதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் உயர்தரப்பரீட்சை வினாத்தாள் மதீப்பீடு மற்றும் புள்ளியிடல் முறையில் கடும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அமைக்களும் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் பரீட்சை புள்ளிகளை மீளாய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.
விஞ்ஞான பிரிவில் தோற்றிய சில மாணவர்களுக்கு கலைப்பிரிவுக்குரிய பெறுபேறுகள் வெளியிடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பிரதேசங்களில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் மாணவர்கள் கடும் அதிர்ப்பதி நிலையில் உள்ளதுடன் பரீட்சை முடிவுகள் மீளாய்வுசெய்யப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநேரம் குறித்த பரீட்சை முடிவுகளை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக