நான்கே வயதான பெண்குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்தீர்களா? பாசமாக வளர்த்த வீட்டு நாய் ஒன்று பெண் குழந்தையின் முகத்தில் கடித்து ரணகளமாக்கியுள்ளது.Jorja Caze-Ramscar என்ற பெண் குழந்தை நாற்காலியை இழுத்து விளையாடிக் கொண்டிருந்தது.Luna என்று அழைக்கப்படும் அவர்களின் செல்ல நாய் திடீரென வந்து சின்னக் குழந்தையின் முகத்தில் கொடூரமாக
கடித்துள்ளது.
குழந்தையின் 36 வயதான தாயான Karine கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட முதல் Jorja க்குப் பக்கத்தில் நாய் நின்றிருந்தது.
தரதரவென்று குழந்தையை தரையில் இழுத்துச் சென்றது. பின்னர் முகத்தில் கடித்தது. இதனால் குழந்தையின் இடது பக்க கண் மற்றும் முகம் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நாயின் வாய் கொஞ்சம் பெரிதாக இருந்தபடியால் குழந்தையின் முகத்தை ரணகளமாக்கிவிட்டது.
குழந்தையை நாய் கொல்லப்போகின்றதோ என்று தான் நான் நினைத்தேன். நாயிடமிருந்து குழந்தையை மீட்க போராடினேன்.
குழந்தையின் முகத்திலிருந்து வழிந்த இரத்தம் தரை எங்கும் பரவி இருந்தது. குழந்தையின் முகத்தில் 20 தையல்கள் போடப்பட்டுள்ளது.
கண்ணில் ஏற்பட்ட காயத்துக்கு சிறப்புச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பதினைந்து மாதங்களே ஆன குறித்த நாய் தற்போது பராமரிப்பிற்காக வேறொரு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக