புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஆம், இன்று தான் அவர் தனது
18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும்.கின்னஸ் சாதனைப் புத்தகத்தில்
இடம்பெற்ற களிப்பில் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது.
பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange / Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்,அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள். பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட அவளது உயரத்திலேயே இருந்தது.

ஜோதி இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நாக்பூரில் தான் பிறந்து வளர்ந்தார்.அவருக்கு achondroplasia என்ற எலும்பு வளர்ச்சிக் குறைபாடுகள் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மக்களை சந்தோசமாக வைத்திருப்பதையே விரும்புகிறேன் என்கிறார் ஜோதி.
தனக்கேற்ற துணிகள் வாங்குவதில் இருந்து தன்னை அழகு படுத்திக் கொள்வது வரை குள்ளம் என்பதைத் தவிர ஜோதியின் ஏனைய செயற்பாடுகள் மற்றைய பெண்களைப் போலவே இருக்கின்றன.

 
Top