"பிட்சா" உணவினை வீட்டில் கொடுக்க வந்த ஓட்டல் டெலிவரி பையன் வீட்டிலிருந்த 23 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது நிறைவேறாததால் அந்தப் பெண்ணை கொலை செய்துள்ளான்.
மும்பை வோர்லி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில், 23 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் நேற்று முன்தினம் இரவு ஓட்டல் ஒன்றுக்கு போன் செய்து, "பிட்சா" எடுத்து வருமாறு, "ஆர்டர்" செய்தார்.
ஓட்டல் உரிமையாளர், தன் கடையில் வேலை பார்க்கும், 17 வயது சிறுவனிடம், "பிட்சா" கொடுத்து அனுப்பியுள்ளார். பெண் வீட்டுக்கு, "பிட்சா"வுடன் சென்ற சிறுவன், அதை பெண்ணிடம் கொடுத்து, வெளியே வந்த போது வீட்டில், அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது தெரிந்தது.
மீண்டும் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி, அழைப்பு மணியை அழுத்தினான். அப்போது கதவைத் திறந்த பெண்ணை, வீட்டினுள் தள்ளி, பலாத்காரம் செய்ய முயன்றான்.
அவனை, அந்தப் பெண் எதிர்த்து போராடவே, சமையறைக்கு இழுத்துச் சென்று, காய்கறி நறுக்கும் கத்தியால், பெண்ணை வெட்டி, கதவை வெளிப்புறமாக பூட்டி, தப்பினான்.
பெண்ணின் மரண ஓலம் கேட்ட பக்கத்தில் வசிப்பவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்து போலீசார் வந்து பார்த்த போது, அந்த பெண் இன்ஜினியர், ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தப்பி ஓடிய டெலிவரி பையனை, போலீசார், நேற்று காலையில் கைது செய்ததோடு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.