பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....' என்று மூக்கின் மீது விரலை வைப்பார்கள்.அதேபோல், உங்களுக்கும் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்று ஆசையா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடி
வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்தான உணவுகள்.
அவை என்னென்ன என்று பார்ப்போமா...
முட்டை: தலைமுடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச்சிறந்த உணவு. முட்டையை அவித்தோ, அல்லது ஆம்லேட், ஆப்பாயில் போன்றவை தயாரித்தோ சாப்பிடலாம். இப்படி முட்டை சார்ந்த உணவு வகைகளை தினமும் சாப்பிடுங்கள்.
இறைச்சி: வாரத்திற்கு இருமுறையாவது கோழி, வாத்து போன்ற பறவைகளின் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. அதில் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரதம், வைட்டமின் பி, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தலைமுடிக்கு தேவையான அத்தியா வசியமான ஊட்டச்சத்துக்கள் இந்த இறைச்சியில் உள்ளன.
மீன்: புரதச்சத்துக்கள், வைட்டமின் பி-12, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுப் பொருள், மீன். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உணவா கும். அதனால், உங்கள் டின்னரில் இனி தவறா மல் மீனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாலாடைக்கட்டி: கால்சியம், புரதச்சத்துக்கள் நிறைந்ததுதான் இந்த பாலாடைக்கட்டி. நீங்கள் சைவப்பிரியரா? மீன், இறைச்சி சாப்பிட முடியவில்லையே என்று வருத்தமா? அதற்கு மாற்று உணவுப்பொருள்தான் இந்த பாலாடைக்கட்டி. இதை குடிசைத்தொழில்களில் ஒன் றாகத் தயாரிப்பார்கள். அத்துடன் பசுமையான கீரை வகைகள் அல்லது பெர்ரி மற்றும் பழங்கள் சார்ந்த உணவு வகைகளையும் உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங் கள்.
பழுப்பு நிற அரிசி: கார்போஹைட்ரேட், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது இந்த பழுப்பு நிற அரிசி. இது தலைமுடி உதிராமல் பாதுகாத்து, அவற்றை உறுதியாக்கு கிறது.
பசுமையான காய்கறிகள்: பசலைக்கீரை, காலிபிளவர் போன்றவை வைட்டமின் `ஏ' மற்றும் வைட்டமின் `சி' போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதுபோன்ற காய்கறிகளில் நிறைய உள்ளன. அவை, தலைமுடியை உடைந்து விடாமல் பாதுகாக்கிறது.
பருப்பு வகைகள்: அவரை விதை போன்ற பருப்பு வகைகளில் புரதம், இரும்பு, துத்தநாகம், பயோட்டீன் போன்ற சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாதுமை: வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் போன்ற தலைமுடிக்கு அவசியமான சத்துக்கள் இந்த வாதுமைக் கொட்டைகளில் உள்ளன. இவை தலைமுடிக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை.
தாதுப்பொருள்கள்: பிரேசில் கொட்டைகளில் சீலினியம் உள்ளது. இது சிறந்த தாதுப்பொருளாக இருந்து தலைமுடியின் வேரை உறுதியாக்குகிறது. நிலக்கடலையில் ஆல்பா லினோலினிக் அமிலம் மற்றும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முந்திரிப்பருப்பு மற்றும் வாதுமைக் கொட்டைகளில் துத்தநாகச்சத்து உள்ளது. இது தலைமுடி உதிராமல் பாதுகாக்கிறது.
உணவு தானியங்கள்: கோதுமை போன்ற உணவு தானியங்களில் துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் `பி' போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியின் வேகமான வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக