புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இணையத்தில் ஓன்லைனில் இலவசமாக வரைவதற்கான இடம், தூரிகை, வண்ணங்கள் இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து.வரைவதற்கான ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக அழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில்
உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது. நமக்கு தேவையான அளவுக்கு தூரிகையின் முனையை பெரிதாக்கி கொள்ளலாம். இதனுடனே அழிக்கும் வசதியும் இருக்கிறது.

மேலே உள்ள கட்டத்தல் வண்ணங்கள் இருக்கின்றன. எந்த வண்ணம் தேவையோ அதனை தெரிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது கட்டம் வரைந்த சித்திரத்தை சேமித்து கொள்வது உட்பட வசதியை த‌ருகிறது.
சித்திரத்தை பேஸ்புக் அல்லது டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. அத்துடன் இந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களையும் வரைய சொல்லலாம்.

கணணி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும், அவர்களோடு சேர்ந்து வரையும் வசதியுமே இந்த தளத்தின் சிற‌ப்பம்சம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top