புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பகுதியில் ஆசிரியையை அடித்துக்கொன்ற சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் பாலசிங்கம் நகுலேஸ்வரன்(வயது-38) சந்தோசபுரம்,சம்பூர் பகுதியைச்சேர்ந்தவர் என தெரிவித்தனர்.


கடந்த 2011-11-24ம்திகதி பாட்டாளிபுரம் கலவன் தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த குறுகுலசிங்கம் சிறிவதனி(வயது-33) என்ற இளம் ஆசிரியையை கோடரியால் அடித்துக்கொன்று விட்டு தங்க ஆபரணங்களை திருடியவர்களை கைது செய்த வேளை முதல் சந்தேகநபரான இவர் கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து காட்டில் மறைந்திருந்ததாகவும்,இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4மணியளவில் காட்டுப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவர் பொலிஸாரை கண்ட நேரம் ஓடியுள்ளார்.

காட்டுப் பகுதியில் மறைந்திருந்த இவர், விறகு வெட்டிச் செல்வும் மக்களைப் பயமுறுத்தி அவர்களிடம் உணவுகளை வேண்டிய சாப்பிட்டு வந்துள்ளார்.

இதனைக் காரணமாக வைத்துப் பொலிஸாரும் விறகு வெட்டுபவர்கள் போல் அப் பகுதிக்குச் சென்று இச் சந்ததேக நபரைச் சுட்டுப் பிடித்துள்ளனர்.

பின்னர் பின்தொடர்ந்த பொலிஸாருக்கு கத்தியால் வெட்ட முட்பட்ட வேளை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இடது கையிலும், வலது காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆசிரியை கொல்லப்பட்ட தினம் முதல் இச்சந்தேக நபர் கிராமவாசிகளாலும் தேடப்பட்டு வந்ததும் தெரியவருகின்றது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பாலசிங்கம் நகுலேஸ்வரன் தற்போது திருகோணமலை அரசினர் பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, மேற்படி சந்தேக நபரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய பொலிஸைப் பொதுமக்கள் பாராட்டுவதுடன், தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தம் பட்சத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸுக்குமிடையிலான உறவுகள் பலப்படுத்தப்படும்.






0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top