புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலியில் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்த கடிதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. கடிதத்தை பிரித்த போது வெடிகுண்டு வெடித்து அதிகாரி படுகாயம் அடைந்தார். இத்தாலியின் ரோம் நகர் அருகே வருமான வரித் துறை அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்துக்கு நேற்று சில கடிதங்கள் வந்தன. அவற்றில், இயக்குனரின் கவனத்துக்கு என்று குறிப்பிட்ட
மஞ்சள் நிறத்தில் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை வருமான வரித் துறை இயக்குனர் மார்கோ குக்காக்னா பிரித்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் மார்கோ படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு கடிதத்தை Ôஇன்பார்மல் அனார்கிஸ்ட் பெடரேஷன் என்ற கும்பல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

முகம், கைகளில் படுகாயம் அடைந்த மார்கோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தாலி யில் புதிய பிரதமராக மரியோ மோன்டி பிரதமர் பொறுப்பேற்றுள்ளார். கடன் நெருக்கடியை தீர்க்க புதிய பொருளாதார கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி வரிகள் உயர்த்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கலவர கும்பல் கூறியுள்ளது. வெடிகுண்டு வைக்கப்பட்ட இன்னும் சில கடிதங்கள் இத்தாலி அலுவலகங்களுக்கு அனுப்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top