சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. சமூகத் தொடர்பு மற்றும் மனித உரிமைகள் என்பதே இம்முறை மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.மனித உரிமைகள் அனைவருக்கும் பொதுவானது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மனித உரிமைகள்
தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவற்றுக்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும் ஏனையோரின் மனித உரிமைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமாதான செயற்பாட்டாளர்கள் பலரும் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே பணியாற்றுவதாக குறிப்பிட்ட பான் கீ மூன் உலகில் பல நாடுகளில் குழப்பநிலை தொடர்வதாக தெரிவித்துள்ளார். மக்களின் பெரும்பாலான மனித உரிமைகள் யதார்த்தமான நிலையில் இல்லையெனவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த வருடத்தில் சுமார் 4000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது. இவற்றில் பெரும்பாலானவை அரச ஊழியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் என ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் நிர்வாக சேவைகள் தொடர்பில் இவற்றில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக