பூமி போன்ற கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் டெலஸ்கோப் மூலம் பூமி போன்ற மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்துள்ளனர்.அதற்கு கெப்லர் 22-பி என பெயரிட்டுள்ளன. பூமியை விட 2.4 மடங்கு
பெரியதாக உள்ள இந்த கிரகம் 600 வெளிச்சம் வருடங்கள் தொலைவில் உள்ளது. அங்கு 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இந்த புதிய கிரகம் வருடத்துக்கு 290 நாட்களை கொண்டது.
பெரியதாக உள்ள இந்த கிரகம் 600 வெளிச்சம் வருடங்கள் தொலைவில் உள்ளது. அங்கு 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இந்த புதிய கிரகம் வருடத்துக்கு 290 நாட்களை கொண்டது.
பெரும்பாலும் இது பாறைகள், கியாஸ் மற்றும் திரவங்களால் ஆனது. இங்கு காற்றும், தண்ணீரும் உள்ளது. இக் கிரகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கிரகத்தில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அங்கு காற்றும், தண்ணீரும் இருப்பதாலும், போதுமான தட்ப வெப்ப நிலை நிலவுவதாலும் அங்கு மனிதர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த தகவலை நாசாவின் கெப்லர் டெலஸ்கோப் மைய நிபுணர் பில் பொலரோக்கி தெரிவித்துள்ளார்.
பூமியை போன்ற கிரகத்துக்கு வெளியே மேலும் 2 கிரகங்கள் உள்ளன. அவை வெளிகோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த 3 கிரகங்களிலும் மக்கள் வாழக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
கெப்லர் 22-பி தவிர மற்ற 2 கிரகங்களுக்கு கிளியாஸ் 58 டி.என்.ஏ. கிளீஷர் மற்றும் எச்.டி.85512 பி என பெயரிடப்பட்டுள்ளது. கிளீஷரை பிரான்ஸ் விஞ்ஞானியும், எச்.டி. 85512-பி கிரகத்தை சுவிட்சர்லலாந்து விஞ்ஞானியும் கண்டு பிடித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக