கல்யாணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வட இந்தியாவைச் சேர்ந்த லோடுமேன் ஒருவர், அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்ததால் பயந்து போய் மாடியிலி்ருந்து கீழே குதித்தார். அதில் பலத்த அடிபட்டு செத்தார்.பீகாரைச் சேர்ந்தவர் நாராயண திவாரி. 30 வயதான இந்த திவாரி,
எருக்கஞ்சேரியில் வசித்து வந்தார். இவர் மட்டும் தனியாக இருந்தார். லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். திவாரிக்கும், தண்டையார்பேட்டையில் அவர் வேலை பார்த்த நிறுவனத்திற்கு அருகில் வசித்து வரும் ஒரு கல்யாணமான பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரிந்தது. இதையடுத்து மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துக் கண்டித்துள்ளார். இருந்தும் கள்ளக்காதலை இருவரும் விடவில்லை.
நேற்று முன்தினம் வழக்கம் போல தனது கள்ளக்காதலியைத் தேடி போயுள்ளார் திவாரி. இந்தத் தகவல் பெண்ணின் கணவருக்குத் தெரிய வந்தது. உடனடியாக தனது உறவனர்களை திரட்டிக் கொண்டு வீட்டை முற்றுகையிட்டார் அவர். இதனால் பயந்து போன திவாரி என்ன செய்வது என்று தெரியாமல், மொட்டை மாடிக்கு ஓடினார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது கீழே விழுந்து பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.
ராதாகிருஷ்ணன் நகர் போலீஸார் விரைந்து வந்து திவாரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக