புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போலியான தங்க ஆபரணங்களை அடகு வைத்து ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிக மோசடி செய்த சம்பவம் தொடர்பில இரண்டு பெண்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரஹல
ரணசிங்க தலைமையில் இடம்பெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் அடகு வைக்கப்பட்ட வளையல் ஒன்றை பரிசோதனை செய்யும்போதே அவை போலியான தங்கமென கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த வழக்கினை கொலன்னாவை அரச வங்கிக் கிளையொன்றின் முகாமையாளர் தாக்கல் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top