இங்கிரிய - குரண பகுதியில் மனைவியிடம் தும்புத் தடியால் அடிவாங்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார்.கடந்த 4ம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த கணவன் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று
வந்த நிலையில் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
வந்த நிலையில் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, காலி - உடுகம பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
34 வயதுடைய ஆணும், 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, சூரியவெவ பகுதியில் கணவன் மனைவியை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரான கணவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக