திருகோணமலை நகர்ப்பகுதியை அண்மித்த பகுதிகளில் மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல்துறை பகுதியில்
தனது தந்தையினால் 15 வயது சிறுமி பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரியாய் பகுதியில் தாய் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் 14 வயது சிறுமியை வவுனியா பகுதியிலிருந்து வந்த 25 வயதுடைய இளைஞன் தான் காதலிப்பதாக கூறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும், உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் 14 வயது சிறுமியை 15 வயது சிறுவன் காதலித்துவிட்டு 06 மாத கற்பமாக்கியதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கப்பல்துறையில் மகளைக் கற்பழித்த தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தியுள்ளதாகவும், காதலித்து கற்பம் கொடுத்த 15 வயது சிறுவனை நேற்று வியாழக்கிழமை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாகிய வவுனியா இளைஞனை குச்சவெளி பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸார் வழங்கிய தகவல்களின் படி தெரியவருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக