புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அபிவிருத்தியடைந்த நாடுகளில் மனிதத்தின் மதிப்பைப் பாருங்கள்... ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர் வீட்டில் இறந்து கிடந்து ஓராண்டுக்குப் பின்னரே எலும்புக்கூடாக மீட்க்கப்பட்டுள்ளார்.தொடர் மாடி ஒன்றின் நான்காவது மாடியிலுள்ள வீட்டில் தொடர்ச்சியாக காஸ் பில் செலுத்தப்படாததால் அதனை துண்டிப்பதற்கு சென்ற ஊழியரே குறித்த வீட்டில் வாழும் முதியவர் இறந்த விடயத்தைக் கண்டு பிடித்துள்ளார்.Nelton Thomas என்று
அழைக்கப்படும் முதியவருக்கு 70 வயது இருக்கலாம் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை அன்று கிழக்கு லண்டனில் உள்ள Homerton என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டின் நாலாம் மாடியின் படுக்கை அறையில் இருந்தே பிணமாக மீட்ட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அயலவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
காஸ் இணைப்பை துண்டிப்பதற்கு வந்தவரே கட்டிலில் எலும்புக் கூடு இருப்பதைக் கண்டு பிடித்தார்.
வீட்டினுள் துர்நாற்றம் தாங்கவே முடியவில்லை முன்னர் கூட அவரால் சரியாக நடக்க்கவும் முடியவில்லை.
அவர் திருமணம் செய்து கொள்ளவுமில்லை அதனால் அவருக்கு பிள்ளைகள் யாருமில்லை. அவரின் பிறந்த இடம் ஜமைக்கா.
இதற்கு முன்னரும் 2006 ஆம் ஆண்டு வடக்கு லண்டனில் Joyce Vincent என்ற 38 வயதான பெண் இறந்து மூன்று வருடங்களின் பின்னர் உடலம் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top