இத்தாலியில் பாறையில் மோதி கடலில் மூழ்கி கொண்டிருக்கும் சொகுசு கப்பலின் கேப்டனைசொகுசு கப்பலின் கேப்டனை இத்தாலி போலீசார் கைது இத்தாலி போலீசார் கைது செய்தனர். 130 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் டஸ்கனி தீவு பகுதியில் கடந்த 14ம் தேதி கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் பாறையில் மோதி
மூழ்கத் தொடங்கியது. அந்த கப்பலில் 4,200 பேர் பயணம் செய்தனர். கப்பல் மூழ்குவதை அறிந்து பயணிகள் பீதியும் பதற்றமும் அடைந்து அலறினர்.
இதற்கிடையில் கடற்படை மீட்பு குழுவினர் மீட்பு படகுடன் விரைந்தனர். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணி முழு வீச்சில் நடந்தது. இதில் ஏராளமான பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலியான 6 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 11 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற அனைவரும் மீட்கப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்ததாக இத்தாலி கடற்படை தெரிவித்தது. கப்பலில் இருந்த 130 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று உறுதியாக தெரிவித்தார். இந்தியர்கள் யாரும் இந்த விபத்தில் பலியாகவில்லை என்றார் அவர். இதற்கிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி கேப்டன் பிரான்சிஸ்கோ மீது படுகொலை உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை இத்தாலி போலீசார் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக