புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்.மாவட்டத்தில் இளவயதில் கர்ப்பவதியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமானதாக அமைவது கையடக்கத் தொலைபேசியின் பாவனை அதிகரிப்பாகவே இருக்கின்றது. சாதாரணமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள அத்தனை உறுப்பினர்களும் தமக்கென தனித்தனித் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர்.பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை இந்த கான்போன் போதைக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர்.

இதனை விட பாடசாலை செல்லும் மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை கான் பைக்குள் கான்போன் இல்லாமல் வெளியில் சென்றதில்லை. அந்தளவுக்கு அதன் புழக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கின்றது. இதனால்தான் இளவயதுக் கர்ப்பம் அதிகரித்த மாவட்டமாக யாழ்.மாவட்டம் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. நவீன மயமாதல் என்ற கொள்கைக்குள் சிக்கி அதனை துஸ்பிரயோகம் செய்கின்றனர் யாழ்ப்பாணத்து இளம் பெண்கள்.

தொலைபேசியில் அழைப்பவர் எவராக இருந்தாலும் நெருங்கிய பழக்கம் கொண்டவர்களுடன் உரையாடுவதுபோல் உரையாடுவது, பின் அவர்களை பிறிதொரு இடத்தில் சந்திப்பது எனத் தொடர்கின்றது இவர்களின் கான்போன் சிநேகிதம்.பிற்பாடு குழந்தையே குழந்தை பெற்றது என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும். இதுதான் எங்களுடைய கலாசாரமாக மாறிவிட்டது.

அடிக்கடி யாழ்ப்பாணத்துக் கலாசாரத்தையும், பெண்களையும் செய்தியாக எழுதி எழுதிக் கேவலப்படுத்துகின்றோம் என கலாசாரத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் சிலர் எழுதி வருகின்றனர். இருந்தும் எமது கலாசாரத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடவில்லை. 

எனவே பெற்றோர்களாகிய நீங்கள், பிள்ளைகளின் வயதை அறிந்து, உங்கள் குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொலைபேசியைக் கொள்வனவு செய்து கொடுங்கள். இல்லையேல் நிலைமை படுமோசமாகிவிடும். நீங்கள் தூக்கிக் கொண்டு செல்லும் உங்கள் குழந்தை தான்னுடைய குழந்தையைத் தூக்கிக் கொண்டு போகும் நிலைமை உருவாகி விடும்.

இத்தனையும் தடுக்கும் வல்லமை கொண்டவர்கள் பெற்றோர்கள். எனவே உங்களின் பிள்ளைகள் தொடர்பில் நீங்கள் நன்கு அறிந்திருங்கள், செயற்படுங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top