புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் 10 வயது மாணவன் விளையாட்டாக கடலில் வீசிய போத்தல் 5 மாதத்திற்கு பிறகு தரை ஒதுங்கியது. இங்கிலாந்தில் உள்ள கிழக்கு யார்க் ஷெரி பகுதியில் வசித்து வருபவன் நோயாகில்(10). அங்குள்ள பள்ளியில் படித்து வரும் அவன் குடும்பத்துடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற போது

ஒரு கடிதம் எழுதி அதை நீண்ட பாட்டிலில் போட்டு தண்ணீர் புகாதபடி மூடியை நன்றாக அடைத்து கடலில் வீசினான். அந்த கடிதத்தில் தனது பெயர்,  படிக்கும் பள்ளிக்கூடம், எங்கு வசிக்கிறான், தன்னுடைய விருப்பம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு இருந்தான்.

இந்த கடிதம் என்னவானது என்ற தகவல் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் வசிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து அவனுக்கு மின்னஞ்சல் கடிதம் கிடைக்கப் பெற்றதாக தகவல் வந்தது.

கடிதம் அடங்கிய பாட்டில் சுமார் 5 மாதங்கள் கடலில் பயணம் செய்து 400 மைல் தொலைவில் இருக்கும் டென்மார்க்கில் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இந்த தகவல் கிடைத்ததும் மாணவனும், அவனது பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நோயாகில்லுக்கும், டென்மார்க் மாணவர்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் நீடிக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top