உடல்நலத்தை பாதிக்கும் ஒட்டுண்ணி புழுக்களை பாதுகாப்பான முறையில் கையாண்டால் மருந்தாக பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் பாதிப்புகளை இவை குணப்படுத்துவது ஆய்வில்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக நுரையீரல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் வில்லியம் காஸ் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தினர். கொக்கிப்புழு போன்ற தோற்றம் கொண்ட நிப்போஸ்டிராங்கிலஸ் பிரேசிலியென்சிஸ் எனப்படும் ஒட்டுண்ணியை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.
ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக வில்லியம் கூறினார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிப்போஸ்டிராங்கிலஸ் வகை ஒட்டுண்ணியால் உலகம் முழுவதும் 70 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளையும் இது ஏற்படுத்துகிறது. இந்த உயிரினம் மாசுபட்ட சேறு அல்லது நீரில் இருந்து லார்வா நிலையில் மனித உடலுக்குள் ஊடுருவுகிறது. அங்கிருந்து ரத்த ஓட்டம் மூலமாக நுரையீரலை சென்றடைகிறது. பின் மூச்சுக்குழலில் நுழைந்து அங்கு ஏராளமாக முட்டைகள் இட்டு லட்சக்கணக்கில் இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர் சிறுகுடல் மூலம் வெளியேறுகின்றன. கட்டுப்பாடற்ற இவை பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையே கட்டுப்பாடான சிகிச்சை மூலம் உடலுக்குள் செலுத்தினால் மருந்தாக செயல்பட்டு பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. அது மட்டுமின்றி, உடலின் பாதிக்கப்பட்ட செல்களை சீர்செய்வதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும்கூட இந்த ஒட்டுண்ணி முக்கிய பங்காற்றுகிறது. இறுதிக்கட்ட ஆய்வு மற்றும் ஒப்புதலுக்கு பிறகு ஒட்டுண்ணி சிகிச்சை நடைமுறைக்கு வரும்.

0 கருத்து:
கருத்துரையிடுக