வியாசன் டைரக்ஷனில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லொள்ளு தாதா பராக் பராக்’. இப்படத்தின் ஷூட்டிங் போளூர் அருகிலுள்ள மலைசார்ந்த ஒரு கிராமத்தில், ஏரிக்கரையில் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மாலை மன்சூர் அலிகான், ஹீரோயின் ஷில்பா
நடித்த காட்சிகள் படமானது. அப்போது எருமை மாட்டின் மீது மன்சூரலிகான் அமர்ந்து வருவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த மக்கள் சத்தம் போட்டதால், எருமை மாடு மிரண்டு ஓடியது. இதில் எருமை மீது அமர்ந்திருந்த மன்சூர் அலிகான், கீழே விழுந்தார். அவரது வலது கை மணிக்கட்டு பகுதியிலுள்ள எலும்பு முறிந்தது. வலியால் துடித்த அவரை போளூரிலுள்ள டாக்ட ரிடம் அழைத்துச் சென்றனர். ஸ்கேன் செய்து பார்த்து, எலும்பு முறிவு ஏற்பட்டதை உறுதி செய்த டாக்டர், உடனே வேலூர் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக