தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாள் முதன் முதலாக கனடா நாட்டில் மார்க்கம் மாநகர சபையில் உத்தியோக பூர்வமாக கொண்டாடப்பட்டது. தமிழர்கள் மாத்திரமன்றி பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் மார்க்கம் மாநகர சபை மண்டபத்தில்,மார்க்கம் நகர சபையின் முதலாவது
தமிழ் அங்கத்தவரான திரு. லோகன் கணபதியின் பாரியார் இராஜேஸ்வரி, கனடா வின் முதலாவது தமிழ் எம்.பி.செல்வி ராதிகா சிற்சபைஈசன் மார்ககம் பாடசாலை அறங்காவலர் யுவனிதா நாதன் ஆகியோர் பொங்கல் பொங்கினார்கள்.
தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் புது வருடத் தினத்தையும் தமிழர்களின் பாரம்பரிய தினமாக மார்க்கம் மாநகர சபையினால் பிரகடனப் படுத்த திரு.லோகன் கணபதி கடந்த பல வருட காலமாக மேற்கொண்டு வந்த முயற்சி இவ்வருடம் கைகூடி வந்துள்ளது.
இன்று கொண்டாடப்பட்ட இப் பொங்கல் விழா உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை உவகை கொள்ளச் செய்யும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொங்கலாகும். இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ் எம்.பி.செல்வி ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றுகையில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள்.
அதனால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இன்புற்றிருக்க இன்று முதல் புதிய வழி பிறக்கும். எங்களை அடையாளப் படுத்தும் எமது கலாச்சார பாரம்பரி யங்களை நாம் கடைப்பிடித்து வாழ வேண்டும். நான் ஐந்து வயதுச் சிறுமியாக கனடாவுக்கு வந்த போதிலும் எனது பெற்றோர் தமிழ் பாரம்பரியங்களுடனேயே என்னை வளர்த்தார்கள்.
இன்றைய நாளை மார்க்கம் மாநகரில் தமிழினத்தின் பாரம்பரிய நாளாகப் பிரகடனப்படுத்திய திரு.லோகன் கணபதிக்கு நாமனைவரும் நன்றியும் பாராட்டும தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஒன்ராறியோ மாகாண கலாச்சார அமைச்சர் திரு.மைக்கல் சான் உரையாற்றுகையில் பல்லின மக்கள் வாழும் மாநகர சபையில் தமிழ் மக்களின் பொங்கல் திருநாள் கொண்டப்படுவது மிக்க மகிழ்ச்சிக்குரியது.
தமிழ் மக்கள் சிறந்த பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தினையும் கொண்டவர்கள். அத்துடன் கடின உழைப்பாளிகள். தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்மை ஏற்பட வாழ்த்துகிறேன் என்றார். இவ்விழாவில் கலந்து கொண்ட சிறுமி நிதுசா பரராஜசிங்கம் " மொழியை மறந்தவன் தன் அடையாளத்தை இழந்தவன் ஆகின்றான்" என்ற பேச்சு அனைவரையும் கவர்ந்திருந்தது.
விழா நிகழ்ச்சிகளை திரு.கௌத்தம் ஆங்கிலத்திலும், செல்வி பவித்திரா தவராசா தமிழிலும் நெறிப்படுத்தினார்கள்.நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி திரு.வின் மகாலிங்கம் உரையாற்றுகையில் தமிழர்களின் பாரம்பரிய இடமான குமரிக் கண்டம் கடலில் மூழ்கியதால் தமிழ் நாடு, இலங்கையென தமிழ் மக்கள் பிரிவு படுத்தப்பட்டார்கள்.
தமிழர்களின் பிரதான உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனு க்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள் இங்கு கனேடியர்கள் கொண்டாடும் Thanks giving Day யைப் போன்றது. இங்கு கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் டாக்டர்கள், பொறியிலாளர்கள், பேராசிரியர்கள் போன்றோர் கனடாவின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்.
தமிழர் திருநாளை மார்க்கம் மாநகர சபையில் பாரம்பரிய திருநாளாக பிரகடனப்படுத்தியமை க்காக அங்கத்தவர் திரு.லோகன் கணபதிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் எனது நன்றியையும், பாராட்டி னையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் மார்க்கம் மாநகர சபை ராஜ், மார்ககம் பாடசாலை அறங்காவலர் யுவனிதா நாதன், மார்க்கம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த யோகா அருள்சுப்ரமணியம் ஆகியோர் தமிழர் பாரம்பரிய நிகழ்வுபற்றி சிறப்பு உரை வழங்கினர்.திரு.லோகன் கணபதி நன்றியுரை வழங்கிய போது தமிழர்களின் பாரம்பரிய நாளாக தைத்திரு நாளை பிரகடனப்படத்த ஒத்துழைப்பு வழங்கிய மார்க்கம் மேயருக்கும், ஏனைய அங்கத்தவர்க ளுக்கும் அத்துடன் பொங்கல் திருநாளைக் கொண்டாட உதவிய தமிழ் அமைப்பினர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளை வழங்கியோருக்கும், இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்த ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக