செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த ரஷியா புரோபொஸ் - கிரண்டு என்ற விண்கலத்தை கடந்த நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் தற்போது செயல் இழந்து விட்டது. எனவே தொடர்ந்து விண்ணில் இருந்து அது கீழே விழ தொடங்கியது.மணிக்கு நூற்றுக்கணக்கான
மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கிய இந்த விண்கலம் எப்போது வேண்டுமானாலும் காற்று மண்டத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறலாம் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி 200 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் 20, 30 துண்டுகளாக வெடித்து சிதறி பூமியின் மேற்பரப்பை வந்தடைந்தது. அது பூமியில் எப்பகுதியில் விழும் என தெரியாத நிலை இருந்தது.இந்த நிலையில், புரோ பொஸ்-கிரண்டு விண்கலத்தின் உடைந்த சிதறல்கள் சிலியில் உள்ள பசிபிக் கடலில் நேற்று விழுந்தது. இந்த தகவலை ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக