புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் பிரமாண்டமான உல்லாச கப்பல்களில் ஒன்றான இத்தாலியின் Costa Concordia கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது.  சுமார் 4,000 ற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன், இத்தாலியிலிருந்து புறப்பட்ட இக்கப்பல்,
இத்தாலியின் Giglio தீவுக்கடலின் கீழ் மணல் திட்டு
அல்லது கற்பாறை (Reef)  ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது 6க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்விபத்தின் போது, கப்பல் மூழ்கப்போவதாக பயந்த சுற்றுலா பயணிகள், கப்பலிலிருந்து கடலில் குதித்துள்ளனர்.
சிலர் உயிர்காப்பு படகுகளின் உதவியுரன் தரைக்கு வந்துள்ளனர். சிலர் கடலில் நீந்தி தரையை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்துள்ளனர். இத்தாலி, ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளே இப்படகில் அதிகமிருந்தனர்.

விபத்தின் போது உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய பகுதியிலிருந்த 50க்கு மேற்பட்டவர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
சில ஊடகங்கள் 8 பேர் பலியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுலா பயணிகள் திடீரென பாரிய வெடிப்பு சத்தமொன்றை கேட்டுள்ளனர்.
'திடிரேன மின்சாரம் தடைபட்டுள்ளது. சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் கப்பல் மூழ்கப்போவதாக உணர்ந்தோம். எம்மால் கட்டுப்படுத்த முடியாத பயம் அனைவரையும் தொற்றுக்கொண்டது. இரவுணவுக்கு ஏற்றது போல் மெலிதான ஆடைகளையே அணிந்திருந்தோம். அதனால் கடும் குளிரால் விரைத்து போயிருந்தோம். கப்பல் மெல்ல மெல்ல நீரில் மூழ்க தொடங்கியது.

உடனடியாக கப்பலிருந்து வெளியேறும் படி அதிகாரிகள் உத்தரவு இட்டதுடன், உயிர் காப்பு படகுகளை உதவிக்கு வரவழைத்தனர். ஆனால் அதற்குள் அவசரப்பட்டு கடலில் குதித்து சிலர் கரைக்கு நீந்த தொடங்கினர்' என பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.  கப்பலில் 30 மீ துளை ஒன்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட போதும், இவ்விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தையும், எங்கு தவறு நடந்தது என்பதையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக கோஸ்டா குரோசியெரா கப்பல் உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது.

டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 100 வருட பூர்த்தி இந்த வருடம் நினைவுகூறப்படவுள்ள நிலையில், அச்சம்பவத்தை ஞாபகப்படுத்தும் மற்றுமொரு விபத்து இப்படி நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கத்தோலிக்கர்களால் பெரிதும் ஆபத்தான தினமென கருதப்படும் '13ம் திகதி வெள்ளிக்கிழமை' நேற்றைய தினமென்பதும் துரதிஷ்டவசமான இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்படுகிறது.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top